|
ஈ தமிழ்24 பிந்திய செய்திகள் >>>> |
|
:: 24 நேர செய்திகள் [Etamil24.com] ::
|
அரசியலமைப்பில் அடுத்த வருடமும் சில திருத்தங்கள்
:
|
|
அடுத்த வருடமும் அரசியலமைப்பில் சில திருத்தங்கள் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 13 வது திருத்தத்திலும் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்துள்ள ஊடகவியலாளர் மாநாடு நேற்று மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இன்று பெரும்பான்மை யான எம்.பிக்களின் ஆதரவுடன் நிறை வேற்றப்பட உள்ளது. எதிர்பார்க்காத அளவு எதிர்க்கட்சி எம்.பிக்கள் இதற்கு [...]
|
|
12வது நாளில் நடைபயணம்
:
|
|
ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள திரு. ஜெகன் (62) அவுஸ்திரேலியா, திருமதி தேவகி குமார் (36) சுவிஸ், திரு. வினோத் (48) பிரான்ஸ் ஆகிய மூன்று ஈழ உணர்வாளர்கள் இன்று (08.09.2010) 12வது நாளில் தமது நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றனர். நேற்று (07.09.2010) காலை Bantzenheim எனும் பிரதேசத்தில் இருந்து ஆரம்பித்து Balgau ஊடாக 26km நடந்து Neuf-Brisach எனும் இடத்தை சென்றடைந்தனர். சீரற்ற காலநிலையிலும் [...]
|
|
நெடுங்கேணி பகுதியில் தவறுதலாக துப்பாக்கி வெடித்து இராணுவ வீரர் பலி!
:
|
|
காவல் கடமையில் இருந்த வேளையில் இராணுவ வீரரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததன் காரணமாக துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி அவ்வீரர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நெடுங்கேணி பிரதேசத்தில் நேற்று அதிகாலை 3 மணியளவில் நடைபெற்றுள்ளது.விசாரணைக்காக சடலம் வவுனியா அரசினர் பொது வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. லான்ஸ் கோப்ரல் தரத்தைச் சேர்ந்த வீரர் ஒருவரே இறந்தவர் ஆவார். இச்சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
|
|
18வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு 159 எம்.பிக்களின் ஆதரவு கிடைத்துள்ளது!
:
|
|
அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு 159 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்க உள்ளனர். ஏற்கனவே ஆளும் தரப்பில் 144 உறுப்பினர்கள் உள்ள நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் 8 உறுப்பினர்களும் இவர்களில் அடங்குகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட அப்துல் காதர் பீ.திகாம்பரம் பிரபா கணேசன் லக்~;மன் செனவிரட்ன எர்ள் குணசேகர மனு~ நாணயக்கார ஆகியோர் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியைச் [...]
|
|
18 வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் இலங்கையின் அரசியல் அமைப்புக்கு முரணாக அமையவில்லை என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!
:
|
|
அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தம் அரசியலமைப்புக்கு அமைவானதென்றும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை யென்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. எனினும் திருத்தச் சட்ட மூலத்தை விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பினை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று (07) பாராளுமன்ற த்தில் அறிவித்தார். பாராளுமன்றம் நேற்றுப் பிற்பகல் ஒரு மணிக்குக் கூடிய போது கேள்வி நேரம் நிறைவடைந்ததும் சபாநாயகர் இந்த அறிவிப்பினைச் செய்தார். சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய [...]
|
|
புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் 200 கிலோ கிராம் எடையுடைய தங்கம் மீட்கப்பட்டது – சரத் பொன்சேகா!
:
|
|
புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் 200 கிலோ கிராம் எடையுடைய தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். யுத்தம் நடைபெற்ற இறுதி நான்காண்டு காலப்பகுதியில் வெள்ளமுள்ளிவய்க்கால் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற தேடுதல் நடவடிக்கைகளின் போது 200 கிலோ கிராம் எடையுடைய தங்கம் மீட்கப்பட்டுள்ளது. அவசரகாலச் சட்டம் தொடர்பான வாக்கெடுப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தம்மை பதவியிலிருந்து நீக்கியதன் பின்னர் மேலும் பெருந்தொகை தங்கம் மீட்கப்பட்ட [...]
|
:: சினிமா செய்திகள் ::
|
ரசிகர்களுக்கு விருந்து வைக்க ரஜினி திட்டம்!
:
|
|
கல்யாணத்திற்கு வந்தால் கூட்டம் கூடும், போக்குவரத்து பாதிக்கப்படும், மக்களுக்குச் சிரமம் என்று கூறி ரசிகர்களை திருமணத்திற்கு வர வேண்டாம் என ரஜினிகாந்த் கூறியதால் கடும் அதிருப்தி அடைந்துள்ள ரசிகர்களை சமாதானப்படுத்தும் வகையில் மகளையும், மருமகனையும் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்க ஒரு கூட்டத்தைக்கூட்டத் திட்டமிட்டிருக்கிறார் ரஜினிகாந்த். சமீபத்தில் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவின் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முதல் நாள் ரஜினி ஒரு அறிக்கை விட்டார். அதில் ரசிகர்கள் திருமணத்திற்கு வந்தால் போக்குவரத்து பாதிக்கப்படும், கூட்டம் கூடி விடும். [...]
|
|
எந்தப் போட்டியும் சந்திக்கத் தயார் – பத்மப்ரியா
:
|
|
ஒரே மாதிரி வேடங்களில் நடிக்க மாட்டேன் என்கிறார் பத்மப்ரியா. இது பற்றி அவர் கூறியது: ‘பொக்கிஷம்’, ‘தவமாய் தவமிருந்து’ படங்களில் ஹோம்லியாக நடித்தேன். தொடர்ந்து அதே போல் நடிக்க முடியாது. அதற்கு சிறிது பிரேக் தருவேன். ‘பழஸிராஜா’வில் அணிந்த பழங்குடி காஸ்ட்யூமை வேறு படத்தில் அணிய முடியாது. அதே போல் பாலியல் தொழிலாளி, கிளப் டான்ஸர் வேடங்களில் கிளாமர் காஸ்ட்யூம்தான் அணிய வேண்டும். அப்படியொரு கேரக்டர் வந்தால் கிளாமராக நடிப்பேன். தென்னிந்திய நடிகைகளுக்கு இந்தி சினிமாவில் எதிர்ப்பு [...]
|
|
சாமியைத் தொடர்ந்து அனகாவுக்கும் கொலை மிரட்டல்
:
|
|
இயக்குநர் சாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் சர்ச்சைக்குரிய படமான சிந்து சமவெளி படத்தின் நாயகியாக அனகா நடித்திருந்தார். அமலா பால் என்ற பெயரில் வீரசேகரன் படத்தில் அறிமுகமான இவர், இந்தப் படத்தில் தனது பெயரை அனகா என மாற்றிக் கொண்டார். சிந்து சமவெளியில் மாமனாருடன் மருமகள் சல்லாபம் செய்யும் காட்சிகள் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. படத்தின் இயக்குநர் சாமிக்கு ஏற்கனவே சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து நேற்று இயக்குநர் சாமி [...]
|
|
அம்பு விட்ட இயக்குநர், பறந்த கேரளத்து பைங்கிளி!
:
|
|
கேரளாவுக்குப் போய்விட்டார் மீராநந்தன். இது படப்பிடிப்பிற்காக அல்ல; மாறாக சோகத்தில் சென்னையை விட்டுப் புறப்பட்டுவிட்டார் என கிசுகிசுக்குது கோடம்பாக்கம். காரணம் கேட்டால் காதல் பிரச்சினையாம்! ‘வால்மீகி’, ‘அய்யனார்’ போன்ற இரண்டு படங்களில் நடிக்கும்போது கூட இத்தனை பிரச்சினை இல்லை அவருக்கு. ‘சூரியநகரம்’ படத்தில் நடிக்கும் போதுதான் இப்படி. அப்படத்தின் இயக்குநர் செல்லமுத்து தான் இந்த வில்லங்கத்துக்கு விந்திட்டவர். அவர் தன் காதலை சொல்ல அது மீரா நந்தனை கவலைக்குள்ளாக்கிவிட்டது. இப்படத்திற்காக 25 நாட்கள் கால்ஷீட் போதும் என்றுதான் [...]
|
|
லண்டன் டிரினிட்டி விருது பெற்ற ஹாரிஸ் ஜெயராஜ்
:
|
|
லண்டன் டிரினிட்டி கல்லூரி, 110 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. இளையராஜாவுக்கு கிளாஸிக்கல் கிடார் இசைப்படிப்பில், இந்த கல்லூரியில்தான் தங்கப்பதக்கம் கிடைத்தது. அந்த கல்லூரி சார்பில், இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை தேர்வு செய்து விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. ஹாரிஸ் ஜெயராஜ், மணிசர்மா, எல்.சுப்பிரமணியம், வி.எஸ்.நரசிம்மன், பி.கணேஷ் குமார் போன்றோர் கவுரவிக்கப்பட்டனர். லண்டன் டிரினிட்டி கல்லூரி தலைமை செயல் அதிகாரி சாரா கெம்ப், பாடகிகள் தன்வி ஷா, ஸ்ரீலேகா பார்த்தசாரதி, விவேக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
|
|
தா பாடல் வெளியீட்டு விழாவை சுவாரஸ்யமாக்கிய கார்த்தி
:
|
|
எதைச் செய்தாலும் அதில் ஒரு லாபத்தை பார்க்கும் மனிதர்களுக்கிடையே, தனது நண்பனுக்காக வேறு ஒரு தொழிலில் ஈட்டிய லாபத்தை வைத்து ஒரு படத்தை தயாரித்திருக்கிறார் தயாரிப்பாளர் ராஜேஷ் உத்தமன். இவர் தயாரித்திருக்கும் முதல் படம் ‘தா’ இப்படத்தை சமுத்திரக்கனியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ஆர்.கே.சூர்யபிரபாகர் இயக்கியிருக்கிறார். 12 ஆண்டுகளாக உதவி இயக்குநராக பணியாற்றியுள்ள சூர்யபிரபாகரை இயக்குநராக்க வேண்டும் என்று இப்படத்தை தயாரிக்க முன்வந்திருக்கும் ராஜேஷ் உத்தமனும், சூர்யபிரபாகரும் நீண்டகால நண்பர்களாம். கோயமுத்துரை கதைக்களமாக கொண்ட இப்படத்தின் நாயகன் [...]
|
:: இந்தியச்செய்திகள் ::
|
திருவாரூர் அருகே திமுக பிரமுகரின் உறவினர் வீடுகளுக்குத் தீவைப்பு-ஒருவர் பலி
:
|
|
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே திமுக பிரமுகரின் உறவினர் வீடுகளுக்கு ஒரு மர்மக் கும்பல் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள பேரளம் பகுதியில் உள்ள தண்டந்தோப்பை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (53). இவர் பேரளம் நகர தி.மு.க. செயலாளராக உள்ளார்.இவர் வீடு அருகே இவரது சித்தப்பா மகன் ராமு, உறவினர்கள் கோவை
|
|
பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசு-டீசல் 10 காசு உயர்வு
:
|
|
டெல்லி: பங்க் உரிமையாளர்களுக்கு அதிக கமிஷன் கொடுப்பதற்காக பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசும், டீசல் விலையை 10 காசும் உயர்த்தப்பட்டுள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்துக்கு ஏற்ப, அவ்வப்போது பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்படுகிறது.இந் நிலையில் பெட்ரோல் பங்க் டீலர்கள் அதிக கமிஷன் கோரியதால் இந்த விலை உயர்வு அமலாக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும்
|
|
ஆசிரியரைக் கொல்ல முயன்ற தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை, ரூ. 1000 அபராதம்
:
|
|
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், படந்தாலுமூடு ஆசிரியரைக் கொல்ல முயன்ற தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து குழித்துறை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.களியக்காவிளை அருகே உள்ள படந்தாலுமூடு புத்தன்கோடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். அரசு பள்ளி ஆசிரியர். இவரது சகோதரிகள் ராஜம்மாள், சரோஜினி ஆகியோர் மூவோட்டுகோணம் பகுதியில் வசித்து வருகின்றனர். சரோஜினியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த
|
|
கேரளாவில் கள் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது: 6 பேர் தமிழர்கள்
:
|
|
திருவனந்தபுரம்: கேரளாவில் விஷக் கள் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் தமிழர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் குற்றிபுரம் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 3 பேர் இறந்து கிடந்தனர். மேலும் 3 பேர் மயங்கிய நிலையில் இருந்தனர். விசாரணையில் அவர்கள் அனைவரும் அருகில் உள்ள குற்றிபுரம் மற்றும்
|
|
போலிப் பூச்சி மருந்துகளால் விவசாயிகள் அதிர்ச்சி-தொழிற்சாலை உரிமையாளர் எஸ்கேப்
:
|
|
கோபி: மும்பையில் உள்ள பிரபல பூச்சி மருந்து நிறுவனத்தின் பெயரில் போலிப் பூச்சி மருந்துகள் கோபிச் செட்டிப்பாளையத்தில் தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த பிரபல பூச்சி மருந்து நிறுவனத்தின் பெயரில் போலிப் பூச்சி மருந்துகளை கோபிச் செட்டிப்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று தயாரித்து வந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ள பூச்சி மருந்துகள் ஈரோடு, சேலம், நாமக்கல்,
|
|
|
| |
தமிழ்ச்செய்திகள்
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
| |
தமிழ்
சஞ்சிகைகள் |
|
|