ஐபிஎல் தொடரில் கிண்ணத்தை வெல்லப் போவது யார்: ஷிகர் தவான் கணிப்பு!
[Monday, 02/04/2012 08:02 AM]
ஐந்தாவது ஐபிஎல் தொடரில் கிண்ணத்தை வெல்லப் போகும் அணியை கணித்துள்ளார் டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான்.
ஐந்தாவது ஐ.பி.எல் டுவென்டி-20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல் மாதம் 4ம் திகதி தொடங்குகிறது. முதலிரண்டு தொடரில் கிண்ணத்தை வென்ற ராஜஸ்தான் றொயல்ஸ்(2008), டெக்கான் சார்ஜர்ஸ்(2009) அணிகள் அதன்பின் பெரிய அளவில் சாதிக்கவில்லை.
கடந்த 2010ல் சாம்பியன் பட்டம் வென்ற டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்தாண்டு நடந்த தொடரிலும் கிண்ணத்தை வென்று அசத்தியது. இம்முறை கோப்பை வெல்ல ஒவ்வொரு அணிகளும் முழுவீச்சில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.
இதுகுறித்து டெக்கான் அணியின் ஷிகர் தவான் கூறியதாவது: ஐந்தாவது ஐ.பி.எல் தொடரில் கிண்ணத்தை வெல்லப்போகும் அணியை தற்போது கணிக்க முடியாது. ஏனெனில் ஒவ்வொரு அணியிலும் திறமையான வீரர்கள் நிறைய இடம் பெற்றிருப்பதால், கிண்ணத்தை வெல்ல கடுமையாக போராட வேண்டும்.
இதேபோல விளையாடும் லெவன் அணியில் இடம் பிடிப்பது எளிதான காரியமல்ல. திறமையான இளம் வீரர்களுடன், அனுபவ வீரர்கள் அதிகம் இருப்பதால் ஒருபோட்டியில் சோபிக்கத் தவறினால் அடுத்த போட்டியில் விளையாடும் வாய்ப்பு மற்ற வீரர்களுக்கு கிடைத்துவிடும்.
எனவே ஒவ்வொரு போட்டியிலும் மிகுந்த கவனமுடன் விளையாடி, இடத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.