முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
ஐ.நா. தீர்மானத்தை ஏற்க மறுத்தால் சாத்வீக போராட்டம்!- சபையில் மாவை எச்சரிக்கை!
[Thursday, 10/05/2012 12:38 AM]
ஐ.நா.வின் தீர்மானத்தையும் தமிழ் கூட்டமைப்பின் ஜனநாயக ரீதியிலான கோரிக்கைகளையும் அரசாங்கம் ஏற்க மறுத்தால் எமது மக்களை அணிதிரட்டி சாத்வீக போராட்டத்தை ஆரம்பிக்கும் கட்டம் உருவாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்று சபையில் எச்சரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை உரையாற்றுகையிலேயே மாவை எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அவர் மேலும் கூறுகையில்,

30 வருட ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகியுள்ள நிலையிலும் இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர்.
ஐ.நா.பையின் அறிக்கையின் பிரகாரம் இன்னும் 6000 பேரே மீள்குடியேற்றப்பட விருப்பதாகக் கூறப்படுகின்றது. இது உண்மைக்குப் புறம்பானதும் முற்றிலும் தவறானதுமான தகவலாகும். எமது தகவலின்படி இடம்பெயர்ந்த நிலையில் மீள்குடியேற்றப்படுவதற்காக இன்னும் மூன்று இலட்த்துக்கும் அதிகமானவர்கள் இருக்கின்றனர் என்பதே உண்மையாகும்.

எமது மக்களுக்கு சொந்தமான காணிகள், விவசாய நிலங்கள் அனைத்தும் சிங்கள பௌத்த ஆக்கிரமிப்புக்கும் இராணுவ ஆக்கிரமிப்புக்கும் உள்ளாகிவருகின்றன.

எமது கடற்பரப்புகளுக்கு செல்ல எமது மக்கள் மறுக்கப்படுகின்றனர். அதேவேளை, தெற்கிலிருந்து சிங்களவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு குடியேற்றப்பட்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட அனுமதியளிக்கப்பட்டிருக்கின்றது.

இது இவ்வாறிருக்க வடக்கில் ஒவ்வொரு வீட்டின் முன்னும் இராணுவம் நிற்கின்றது. அங்கு புத்தர் சிலைகளை நிறுவுவதற்கு பாதுகாப்பாகவும் நிற்கின்றனர்.

முல்லைத்தீவில் 2500ஏக்கர் நிலப்பரப்பு இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அங்கு இராணுவக் கட்டமைப்புகளும் இராணுவக் குடியேற்றங்களும் இடம்பெற்றுள்ளன.

நந்திக்கடல் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் அங்கிருந்து காட்டுப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மாதகல் பகுதியில் எமது மக்கள் விரட்டப்பட்டு விகாரைகளையும் இராணுவ நிறுவனங்களையும் அமைத்திருக்கின்றனர் இராணுவத்தினர். சிங்களவர்கள் அங்கு சென்று உல்லாசமாக சுகபோகம் அனுபவிப்பதற்கு இடமளிக்கப்பட்டிருக்கின்றது.

முஸ்லிம்கள் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கின்ற போதிலும் தமது மத உரிமையைப் பாதுகாப்பதற்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர். தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதேசங்களில் பௌத்தத்தை திணிப்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

சிறுபான்மை பகுதிகளில் சிங்கள மக்களை குடியேற்றி பௌத்த மதத்தை திணித்து ஆக்கிரமிப்பை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் திட்டம் என்பது புலப்படுகின்றது. இவ்வாறு இடம்பெறும் செயற்பாடுகள் மூலம் தேசிய நல்லிணக்கம் ஏற்படப்போகின்றதா?

எமது மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் கைதானவர்களின் விடுதலைக்கும் அரசியல் தீர்வுக்கும் என அரசாங்கத்துடனான ஒரு வருடகால பேச்சுக்களில் நாம் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்து வந்தோம். எனினும் எதனையாவது அரசாங்கம் நிறைவேற்றியதாக இல்லை.

எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கும் ஐக்கிய இலங்கைக்குள் ஓர் அரசியல் தீர்வினை எட்டுவதற்கும் என அரசாங்கத்துடன் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். அரசாங்கம் எமது நல்லெண்ணத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஆயுதப்போராட்டத்தில் தோற்கடிக்கப்பட்ட எமது மக்கள் இன்று ஜனநாயக ரீதியில் எழுந்து நிற்கின்றனர். எனவே, நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிகள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தையும் தமிழ் மக்களுடனான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயக கோரிக்கைகளை ஏற்று அரசாங்கம் நியாயமானதோர் அரசியல் தீர்வுக்கும் அதற்கு முன்பதாக எமது மக்களின் அவசரத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் முன்வரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.

இதிலிருந்து அரசாங்கம் தவறும் பட்சத்தில் தந்தை செல்வா காட்டிய வழியில் நாமமது மக்களை அணிதிரட்டி சாத்வீகப் போராட்டத்துக்கு தயாராக வேண்டிய நிலை உருவாகும் என்றார்.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
மன்னாரில் உணர்வுபூர்வமாக மாவீரர்கள் தினம் அனுஸ்டிப்பு
[Friday, 27/11/2015 09:48 AM]
யாழில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு
[Friday, 27/11/2015 09:16 AM]
மாவை சேனாதிராஜா தலைமையில் யாழில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு
[Friday, 27/11/2015 09:06 AM]
முயற்சி தோல்வி! விடுதலை புலிகளின் நகைகள் சிக்கவில்லை!
[Friday, 27/11/2015 07:59 AM]
சிறிய மற்றும் பாரிய திட்டங்கள் நிதியின்றி ஆரம்பிக்கப்பட்டதாக பிரதமர் குற்றச்சாட்டு
[Friday, 27/11/2015 07:58 AM]
ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக வழக்கு
[Friday, 27/11/2015 07:57 AM]
வாஸ் குணவர்த்தன குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு: மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிப்பு
[Friday, 27/11/2015 07:56 AM]
ளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் பிரதமரின் ஆலோசனைக்கமைய விசேட கல்வி அபிவிருத்தி வலயம்
[Friday, 27/11/2015 07:54 AM]
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வாகரை மக்களுக்கு நிவாரண உதவி
[Friday, 27/11/2015 07:53 AM]
அத்தியாவசிய பொருட்களுக்கான விலை குறைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது
[Friday, 27/11/2015 07:49 AM]
கந்தளாயில் தோட்டாக்களுடன் துப்பாக்கி மீட்பு!
[Friday, 27/11/2015 07:48 AM]
கல்விக்கான நிதியொதுக்கீடு நடைமுறைச்சாத்தியமற்றது! அனுரகுமார திசாநாயக்கவும் எதிர்ப்பு
[Friday, 27/11/2015 07:47 AM]
நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வளிக்கும் வரவு-செலவு திட்டம் இது: இரா. சம்பந்தன்
[Friday, 27/11/2015 07:47 AM]
பிரிந்து நின்று இழந்தது போதும், ஒற்றுமையாய் நின்று வெற்றிகள் காண்போம்! கலாநிதி றியாஸ் வேண்டுகோள்
[Friday, 27/11/2015 07:46 AM]
ஐக்கிய தேசிய கட்சியுடன் மோதல் கிடையாது! சுதந்திரக்கட்சி உத்தரவாதம்
[Friday, 27/11/2015 07:44 AM]
சுயாதீன ஆணைக்குழுக்களை பலப்படுத்துவது அவசியம்: அமைச்சர் லக்ஸ்மன்
[Friday, 27/11/2015 07:43 AM]
நாடாளுமன்ற அனுமதியின்றி ஐ.நா. குழுவினரை கடற்படை முகாமுக்குள் அனுமதித்தது தவறு! மஹிந்த
[Friday, 27/11/2015 07:43 AM]
தந்தையைக் கொலை செய்த 15 வயது மகன் கைது
[Friday, 27/11/2015 07:42 AM]
குமார் குணரட்னம் மூன்றாவது முறையாகவும் விளக்கமறியலில்
[Friday, 27/11/2015 07:41 AM]
ஐந்து கோடி ரூபா நட்டஈடு கோரி கொண்டயா அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல்
[Friday, 27/11/2015 07:40 AM]
மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வு
[Friday, 27/11/2015 07:37 AM]
பொது கணக்கு குழு தலைவராக லசந்த அழகியவண்ண நியமனம்!
[Friday, 27/11/2015 07:34 AM]
ஜனாதிபதி மைத்திரியின் மோல்டா உரை
[Friday, 27/11/2015 07:31 AM]
மாவீரர் நினைவாக மரங்களைப் போற்றுவோம்: வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்
[Friday, 27/11/2015 07:29 AM]
கோப்பாய் மாணவன் செந்தூரனின் கடிதம் தொடர்பில் சந்தேகம்?
[Friday, 27/11/2015 07:26 AM]
தீயுடன் சங்கமமான செந்தூரனின் புகழுடல்: அமைதியான முறையில் இறுதிக் கிரியைகள்
[Friday, 27/11/2015 07:11 AM]
முன்னாள் அமைச்சர் ஜகத் புஸ்பகுமார ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்
[Friday, 27/11/2015 01:27 AM]
பல்கலைக்கழக மாணவ ஒன்றிய ஆர்ப்பாட்டத்திற்கு தடையுத்தரவு
[Friday, 27/11/2015 01:27 AM]
புலனாய்வாளர்கள் மத்தியில் தாயக விடுதலைக்காய் உயிர் நீத்தவர்களுக்கு நல்லூரில் ஈகை சுடர் ஏற்றி அஞ்சலி
[Friday, 27/11/2015 01:09 AM]
நம்பிக்கையிலான ஒரு உறவினருக்கு பதவி வழங்குவதில் தவறில்லை: அர்ஜூன
[Friday, 27/11/2015 12:42 AM]
வரவு செலவுத் திட்டத்தில் தமிழ் மக்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது: விஜயகலா
[Friday, 27/11/2015 12:41 AM]
பொது எதிர்க்கட்சிக்கு உரிய இடமின்றேல் சபா பீடத்துக்கு எதிராகச் செயற்படுவோம்: ரஞ்சித் டி சொய்ஸா எச்சரிக்கை
[Friday, 27/11/2015 12:40 AM]
மாணவன் தற்கொலை செய்தமைக்காக அரசியல் கைதிகள் விடயத்தில் அரசு பலவீனமான தீர்மானம் எடுக்காது: சந்திம
[Friday, 27/11/2015 12:39 AM]
நிதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் புரிந்துணர்வற்ற நடவடிக்கை: பிதமர்
[Friday, 27/11/2015 12:38 AM]
கல்விக்காக அதிக நிதி ஒதுக்கப்படவில்லை: மஹிந்த
[Friday, 27/11/2015 12:37 AM]
வரவு செலவுத்திட்டத்தில் குறைபாடுகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்! ரவி கருணாநாயக்க
[Friday, 27/11/2015 12:37 AM]
அமைச்சர் ராஜிதவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
[Friday, 27/11/2015 12:36 AM]
அரசியல் கைதிகள் கூடுதல் தண்டனையை அனுபவித்துள்ளனர்: வியாளேந்திரன் எம்.பி
[Friday, 27/11/2015 12:35 AM]
யாழ். மாணவன் செந்தூரனுக்கு நாடாளுமன்றில் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. அஞ்சலி
[Friday, 27/11/2015 12:34 AM]
மாவீரர் நாள் குறித்து மிகவும் உன்னிப்பாக அவதானிக்கின்றது பாதுகாப்பு அமைச்சு: நீதி அமைச்சர்
[Friday, 27/11/2015 12:34 AM]
மக்கள் மீதான வரிச் சுமை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது: விஜித ஹேரத்
[Friday, 27/11/2015 12:33 AM]
ஜாமீன் கிடைத்தும் வீடு செல்ல முடியாத துரதிஷ்டம்! மருத்துவமனைக்குத் திரும்பினார் ஜனக தென்னக்கோன்
[Friday, 27/11/2015 12:32 AM]
செந்தூரனின் மரணம் அரசாங்கத்தின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்புமா?: சிவசக்தி ஆனந்தன் கேள்வி
[Friday, 27/11/2015 12:32 AM]
தனது உயிரைத் தியாகம் செய்த செந்தூரனுக்கு த.தே.கூ தலை வணங்குகின்றது: செல்வம் அடைக்கலநாதன்
[Friday, 27/11/2015 12:31 AM]
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு எச்சரிக்கை
[Friday, 27/11/2015 12:30 AM]
தமிழகத்தில் மாவீரர் தின நிகழ்ச்சிகளை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி
[Friday, 27/11/2015 12:29 AM]
அரச பணியாளர்களுக்கு நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம் நடாத்தப் போவதாக ஜேவிபி எச்சரிக்கை
[Monday, 23/11/2015 05:21 AM]
புலனாய்வு தகவல்களின் அடிப்படையிலேயே புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம்!– பாதுகாப்பு செயலாளர்
[Monday, 23/11/2015 05:20 AM]
வட, கிழக்கில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் மந்த கதியில் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு
[Monday, 23/11/2015 05:20 AM]
தளபதிக்கு தெரியாமல் இரகசிய முகாமா?
[Monday, 23/11/2015 05:19 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 804 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
உயர்வு
பாரிஸ் தமிழ்
அத தெரண
சரிதம்
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
இன்போ தமிழ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
வணக்கம் இந்தியா
சென்னை ஒன்லைன்
புதிய உலகம்
செய்தி
தென் சேய்தி
தமிழ் 10
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
நாதம்
மாவீரர் இல்லம்
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
ஈழம் டெய்லி
வெற்றி முரசு
தமிழ்லீடர்
தமிழன்குரல்
யாழ்நாதம்
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்வாணன்
தமிழ்மணம்
திரைமணம்
விறுவிறுப்பு
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
அதிகாலை
கீற்று
இருக்கிறம்
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
குரும்பசிட்டி வெப்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
சினிமா சௌத்
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
விழுது
உழவன்
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
சென்.ஜோண்ஸ் கல்லூரி
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
சென் பற்றிக்ஸ் கல்லூரி
யாழ். வேம்படி
ஸ்கந்தவரோதயக் கல்லூரி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ATBC -அவுஸ்திரேலியா
மொன்றியல்-MTR-24
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
விடியல் FM (Sri Lanka)
தமிழ் அருவி FM
ஜே-FM
தமிழ் ஸ்டார் வானொலி
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
இதயம் FM
வெற்றி வானொலி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
அருள் ஜோதிடம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
தமிழ் பாடல்கள்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Lankapuvath
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelanatham
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
ரீச் சதீஸ்
யூசர் ரியூப்
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழருவி
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2015). Facebook Twitter Youtube