முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
அமெரிக்கா பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்!
[Sunday, 03/09/2017 01:32 AM]

கடந்த ஆகஸ்ட் 30ம் திகதி ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத மூன்று நிகழ்வுகளில் அமெரிக்க அதிகாரிகள் பங்கேற்றிருந்தார்கள்.

அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் இராணுவ அதிகாரிகள் குழு பத்தரமுல்லையில் உள்ள போரில் உயிர்நீத்த படையினரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியது முதலாவது நிகழ்வு.

வெலிசறை கடற்படைத் தளத்தில் அமெரிக்க கடற்படையின் மரைன் படைப் பிரிவினால் இலங்கைக் கடற்படையின் மரைன் பிரிவுக்கு அளிக்கப்பட்டு வந்த ஒன்பது நாட்கள் களப் பயிற்சி ஒத்திகை நிறைவு நிகழ்வு இரண்டாவது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு கொழும்பில் நடந்த நிகழ்வில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ் மற்றும் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் உள்ளிட்டோர் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவு கூர்ந்தமை மூன்றாவது நிகழ்வு.

இந்த மூன்று சம்பவங்களும் எதேச்சையாக நடந்தவை என்று கூற முடியாது. அதேவேளை வெளித்தோற்றத்துக்கு ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றதாகவும் கூடத் தெரியும்.

ஆனால் இலங்கை தொடர்பான அமெரிக்க நிகழ்ச்சி நிரலில் தெளிவான கொள்கை வகுப்பை இந்த நிகழ்வுகள் சுட்டி நிற்கின்றன. பாலுக்கும் காவலாக பூனைக்கும் தோழனாக இருக்க விரும்பும் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலை அப்படியே இந்த நிகழ்வுகள் படம் பிடித்துக் காட்டியிருக்கின்றன.

ஒபாமா அரசாங்கத்தில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமை மீறல்கள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலராக இருந்தவர் ரொம் மாலினோவ்ஸ்கி. இப்போது அவர் இராஜாங்கத் திணைக்களத்தில் இருந்து விலகி விட்டார்.

இவர் மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு வந்திருந்த போது முள்ளிவாய்க்காலில் இறுதிப் போர் நடந்த இடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தார். அது மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான நகர்வுகளை அமெரிக்கா தெளிவாக முன்னெடுத்த காலம்.

அவரது இந்த நடவடிக்கை போரினால் பாதிக்கப்பட்ட மக்களுடன் அமெரிக்கா நிற்கிறது என்பதை வெளிப்படுத்துவதற்கான ஒரு குறியீடாக அமைந்தது. அமெரிக்கா இப்போதும் அந்த நிலைப்பாட்டில் தான் இருக்கிறதா என்பது முக்கியமான கேள்வி.

இலங்கை வரலாற்றில் முன்னொரு போதும் இல்லாத வகையில் இலங்கையில் போரில் உயிரிழந்த படையினருக்கான அமெரிக்க இராணுவ அதிகாரிகள் குழுவொன்று அஞ்சலி செலுத்தியிருக்கிறது.

இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் கடந்த 28ம் திகதி தொடக்கம் 29ம் திகதி வரை நடத்தப்பட்ட 7வது கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கில் பங்கேற்பதற்காக அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் உயர் அதிகாரிகள் குழுவொன்று கொழும்பு வந்திருந்தது.

அவுஸ்திரேலியாவில் உள்ள அமெரிக்க இராணுவ பசுபிக் கட்டளைத் தலைமையகத்தின் வடக்குப் பகுதிக்கான கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரோஜர் நோபிள் தலைமையிலான அதிகாரிகளே இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றிருந்தனர்.

மேஜர் ஜெனரல் ரோஜர் நோபிள் அவுஸ்திரேலிய இராணுவத்தின் ஒரு அதிகாரி. எனினும் அவுஸ்திரேலியாவில் உள்ள அமெரிக்க படைத் தலைமையகத்தின் பிரதிக் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றுகிறார்.

அவருடன் அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜோன், மேஜர் மில்ஸ் பாக்கர், கப்டன் ஜெரிமி டிக்சன் ஆகியோரும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேர்ணல் டக்ளஸ் ஹெஸ்சும் இணைந்தே பத்தரமுல்ல இராணுவ நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.


இலங்கையில் நடந்த போரில் மீறல்கள் நடந்திருப்பதாக குற்றம் சாட்டிய அமெரிக்கா, அதற்குப் பொறுப்பான படை அதிகாரிகளும் பொறுப்புக்கூற வேண்டும் என்று முன்னர் வலியுறுத்தி வந்தது.

போரில் பங்கெடுத்த மீறல்களில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்ட இராணுவப் படைப் பிரிவுகளுக்கு தலைமை தாங்கிய சில இராணுவ அதிகாரிகளுக்கு வீசா வழங்குவதற்கு கூட அமெரிக்கா அனுமதி மறுத்திருந்தது.

ஆனால் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் அமெரிக்கா இலங்கையின் முப்படைகளுடனும் எல்லா விதமான உறவுகள், ஒத்துழைப்புகளையும் பலப்படுத்தி வருகிறது.

இதன் ஒரு கட்டம் தான் போரில் இறந்த படையினருக்கு அமெரிக்க படை அதிகாரிகள் அஞ்சலி செலுத்திய நிகழ்வாகும். இதற்கு முன்னர் பல அமெரிக்க படை உயர் அதிகாரிகள் இலங்கைக்கு வந்து சென்றிருக்கிறார்கள். ஆனாலும் அப்போதெல்லாம் இல்லாத வகையில் முதன்முறையாக இந்த அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டிருப்பது ஆச்சரியமானது தான்.

2015ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்து இலங்கைக்கு அமெரிக்க படை அதிகாரிகளும் போர்க் கப்பல்களும் விமானங்களும் வந்து செல்வது வழக்கமான விடயங்களாகி விட்டன. இலங்கைக் கடற்படையில் மரைன் படைப்பிரிவை உருவாக்கி அதற்குப் பயிற்சிகளை அளித்திருப்பது அமெரிக்கா தான்.

தொடர்ச்சியான கூட்டுப் பயிற்சிகள், ஒத்திகைகள் இடம்பெற்று வருகின்றன. இவற்றில் சில பற்றிய தகவல்கள் தான் வெளியே விடப்படுகின்றன. பல பயிற்சிகள் இரகசியமாகவே மேற்கொள்ளப்படுகின்றன.

உதாரணத்துக்கு பசுபிக் தீவான குவாமில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளத்தில் இலங்கைக் கடற்படையின் 14 அதிகாரிகளுக்கு சுழியோடும் பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இது இரண்டாவது தொகுதி அதிகாரிகளுக்கான பயிற்சியாகும். கடந்த மாதம் நிறைவடைந்த இந்தப் பயிற்சிகள் பற்றிய தகவல்கள் வெளியே விடப்படவில்லை.

வெலிசறை கடற்படைத் தளத்தில் கடந்த 21ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரை அமெரிக்க கடற்படையின் மரைன் படைப்பிரிவைச் சேர்ந்த 17 அதிகாரிகள் 140 இலங்கைக் கடற்படை மரைன் படையினருக்கு களப் பயிற்சிகளை அளித்தனர். இந்தப் பயிற்சி நிறைவும் கூட கடந்த 30ம் திகதி தான் நடந்திருந்தது.

அதே 30ம் திகதி தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பதில் உதவி இராஜாங்கச் செயலரான அலிஸ் வெல்ஸ் கொழும்பு வந்திருந்தார்.

அமெரிக்காவில் ட்ரம்ப் அரசாங்கம் பதவிக்கு வந்து ஆறு மாதங்களுக்குப் பின்னர் கடந்த ஜூன் மாதம் 29ம் திகதி அலிஸ் வெல்ஸ் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பதில் உதவிச் செயலராக நியமிக்கப்பட்டார்.

ஒபாமா அரசாங்கத்தில் உதவிச் செயலர் நிலையில் இருந்தவர் நிஷா பிஸ்வால். அவருக்குப் பின்னர் இன்னமும் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களைக் கையாள்வதற்கு நிரந்தர உதவிச் செயலராக யாரும் நியமிக்கப்படவில்லை.

எனினும் அமெரிக்க வெளிவிகாரச் சேவையின் முக்கிய அதிகாரிகளில் ஒருவரான அலிஸ் வெல்ஸ் கடந்த ஜூன் மாதம் பதில் உதவிச் செயலராக நியமிக்கப்பட்டார். அவர் இலங்கை வந்திருப்பது இதுதான் முதன்முறை.

அவர் கொழும்பு வந்த கடந்த 30ம் திகதி இரண்டு நிகழ்வுகளில் பங்கேற்றார். ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பு. இரண்டாவது கொழும்பில் நடந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நாள் நிகழ்வு.

காணாமல் ஆக்கப்பட்டவர்களை நினைவு கூருகின்ற நிகழ்வில் அலிஸ் வெல்ஸ், அதுல் கெசாப் உள்ளிட்டோர், எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சிவில் சமூ5கப் பிரதிநிதிகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் இணைந்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தியிருந்தார்.

ரொம் மாலினோவ்ஸ்கி முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தியதற்குப் பின்னர் அமெரிக்க உயர் அதிகாரிகள் இதுபோன்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்றதும் இதுதான் முதல் தடவை.


காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை பொறுப்புக்கூறலில் முக்கியமானதொன்று. பொறுப்புக்கூறல் வாக்குறுதியில் அரசாங்கம் தொடர்ச்சியாக நழுவி வருகின்ற நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியும் அதிகரித்திருக்கிறது.

இந்த அதிருப்தியின் விளைவாக தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கூட அரசாங்கத்தின் மீது முறைப்பாடுகளை செய்ய ஆரம்பித்திருக்கிறது.

ஐநா பொதுச் செயலருக்கும் ஐநா மனித உரிமை ஆணையாளருக்கும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தூதுவர்களுக்கும் இரா.சம்பந்தன் கடிதங்களை எழுதியது அதன் ஒரு கட்டம் தான்.

ஜெனிவா தீர்மான வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அழுத்தம் கொடுக்கும்படி சம்பந்தன் இப்போது தொடர்ச்சியாக வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் வலியுறுத்த ஆரம்பித்துள்ளார்.

காணாமல் போனோர் பணியகம் உருவாக்கப்பட்டும் அது செயற்படத் தொடங்கவில்லை. நிலைமாறுகால நீதி பொறிமுறைகளையோ சிறப்பு நீதிமன்றப் பொறிமுறைகளையோ அமைக்கவில்லை.

இது பற்றிக் கேள்வி எழுப்பப்பட்டதற்கு இலங்கை தனது பாணியில் மெதுவாகத்தான் பொறுப்புக்கூறலை நிறைவேற்றும் என்று கூறியிருக்கிறார் ஜனாதிபதி. மெதுவான பொறுப்புக்கூறல் என்பது என்ன?

மெதுவாகவே நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வோம் என்று தமிழர் தரப்பும் அழுங்குப்பிடியில் நிற்க முயன்றால் அதன் விளைவு எத்தகையதாக இருக்கும் என்று அரசாங்கம் சிந்திக்கவில்லை.

அரசாங்கத்தின் போக்கு காலத்தைக் கடத்துவது அடுத்த பாராளுமன்றத் தேர்தல் வரை இழுத்தடிப்பதேயாகும். இதனை இப்போது சர்வதேச சமூகமும் ஓரளவுக்கு உணர்வதாகத் தெரிகிறது.

அரசாங்கத்தின் நல்லிணக்கச் செயற்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படாதமை சர்வதேச சமூகத்தை ஏமாற்றமடையச் செய்திருக்கின்றன என்பதை ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதி போல் கொட்பிறியின் கருத்தும், அதனை ஆமோதிக்கும் வகையில் அமெரிக்கத் தூதுவர் வெளியிட்ட பதிவும் உறுதி செய்கின்றன.

அமெரிக்கா இந்தச் சூழலை நன்றாகவே புரிந்து கொண்டிருக்கிறது.

அரசாங்கத்துடனும் அதன் படைகளுடனும் நெருங்கிய உறவுகளை வைத்திருக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது. அது அமெரிக்காவின் பூகோள அரசியல் மூலோபாய நலன்களின் அடிப்படையில் முக்கியமானது.

அதேவேளை பாதிக்கப்பட்டவர்கள் சர்வதேச சமூகத்தின் மீது நம்பிக்கை இழக்கத் தொடங்கியுள்ளதையும் அமெரிக்கா புரிந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறது. அதனைச் சமாளிக்கவே நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்பது போல நடந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறது.

கடந்த வாரம் ஒரே நாளில் நடந்த மூன்று வெவ்வேறு நிகழ்வுகளும் இந்தக் கோணத்தில் பார்க்கப்படுவதே பொருத்தமானது.

பாலுக்கும் காவலாக பூனைக்கும் தோழனாக இருக்க அமெரிக்கத ஆசைப்படுகிறது. இது எந்தளவுக்குச் சாத்தியமாக இருக்கப் போகிறது.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
சீனாவின் கடன்பொறி – சிறிலங்கா முன் உள்ள சமநிலை சவால்
[Monday, 21/08/2017 12:45 AM]
சீனாவிடம் அம்பாந்தோட்டை – இந்தியா கவலைப்படுவது ஏன்?
[Friday, 04/08/2017 07:07 AM]
மலபார் கூட்டுப் பயிற்சி – யாரைக் குறிவைக்கிறது?
[Wednesday, 02/08/2017 07:19 AM]
சிறிலங்கா அரசுக்கு கடுப்பை ஏற்படுத்திய ஐ.நா சிறப்பு நிபுணரின் பூர்வாங்க அறிக்கை
[Monday, 24/07/2017 07:06 AM]
வரலாற்றுப் பழி சுமக்குமா கூட்டமைப்பு?
[Monday, 17/07/2017 04:12 AM]
காணாமல் போன பிரிகேடியர்! இரகசியங்கள் கசியுமா?
[Sunday, 16/07/2017 03:49 AM]
போர்க்குற்ற விசாரணைக்கான கதவுகள் திறக்கப்படுமா?
[Sunday, 09/07/2017 07:37 AM]
மக்களால் தோற்கடிக்கப்பட்ட சக்திகளின் மறைமுக சதி!
[Friday, 07/07/2017 05:23 AM]
தமிழ் தேசியவாத அரசியலின் தோல்வி!
[Friday, 07/07/2017 05:22 AM]
தமிழ்மக்கள் விக்னேஸ்வரனுக்கு உணர்த்தியிருக்கும் பொறுப்பு – நிலாந்தன்
[Sunday, 25/06/2017 04:38 AM]
வடமாகாண சபைக்கு ஓர் திறந்த மடல்! ச.வி.கிருபாகரன்
[Tuesday, 20/06/2017 01:54 PM]
விக்னேஸ்வரனின் எழுச்சியும் வீழ்ச்சியும்
[Monday, 19/06/2017 07:00 AM]
ஆப்பிழுத்த தமிழரசுக்கட்சி? அரசியல் தற்கொலைக்கு முயற்சிக்கிறதா? – நிலாந்தன்
[Sunday, 18/06/2017 07:51 PM]
வடமாகாண சபையின் எதிர்காலம்?
[Sunday, 18/06/2017 06:34 AM]
சிறிலங்காவினால் புறக்கணிக்கப்படும் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகள்
[Wednesday, 14/06/2017 07:35 AM]
போர் முடிந்து 8 ஆண்டுகளுக்கு பின்னரும் சிறிலங்கா திரும்புவதற்குத் தடுமாறும் அகதிகள்
[Sunday, 11/06/2017 06:27 AM]
சிறிலங்கா விற்பனைக்கா? – கேள்வி எழுப்பும் பாகிஸ்தான் ஊடகர்
[Thursday, 08/06/2017 05:09 PM]
வடக்கு, கிழக்கில் உலோக வீடுகளை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் சிவில் சமூகம்
[Monday, 05/06/2017 01:39 AM]
ஹெய்டியில் சிறிலங்கா படைகளின் பாலியல் குற்றங்கள் மூடிமறைக்கப்பட்டது எப்படி? – பகுதி -2
[Monday, 05/06/2017 01:34 AM]
சிறிலங்கா படைகளின் பாலியல் குற்றங்கள் மூடிமறைக்கப்பட்டது எப்படி? – அனைத்துலக ஊடகம்
[Saturday, 03/06/2017 07:43 AM]
சிறிலங்காவுக்காக போட்டி போடும் இந்தியாவும் சீனாவும்
[Monday, 29/05/2017 10:41 PM]
போராடும் மக்களின் நம்பிக்கையை இழந்து வரும் சிறிலங்கா அரசாங்கம் : பாகம் -2
[Sunday, 28/05/2017 01:35 AM]
போராடும் மக்களின் நம்பிக்கையை இழந்து வரும் சிறிலங்கா அரசாங்கம் – அமெரிக்க ஊடகம்
[Friday, 26/05/2017 10:26 PM]
தெற்கு, மத்திய ஆசியாவில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதற்கான கதவுகளை திறந்து விடும் அமெரிக்கா
[Tuesday, 16/05/2017 05:40 AM]
காலை வாரும் ஐநா தீர்மான வரைவு!
[Sunday, 19/03/2017 04:39 AM]
சிறிலங்காவில் இனப்பிளவைத் தூண்டும் மொழி ரீதியான அவமதிப்புகள்
[Tuesday, 07/03/2017 07:20 AM]
சொந்த நிலத்துக்காகப் போராடும் தமிழ் மக்கள்
[Friday, 03/03/2017 05:43 AM]
ஈழத் தமிழர் பிரச்சினையும் இந்திய நிலைப்பாடும் – அனைத்துலக ஊடகம்
[Monday, 27/02/2017 07:12 AM]
சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்தின் வெற்றிக்கு பணப்பை மட்டும் போதுமா?
[Friday, 24/02/2017 05:11 AM]
காணாமலாக்கப்பட்டவர்களைத் தேடுகின்ற போராட்டம்
[Tuesday, 21/02/2017 06:48 AM]
இந்திய – சிறிலங்கா உடன்பாடு : சிஐஏ அறிக்கையை நிராகரிக்கும் சிறிலங்காவின் முன்னாள் புலனாய்வாளர்
[Monday, 20/02/2017 06:12 AM]
புலிகள் சுமந்திரனைக் கொல்ல திட்டமா? இந்திய இலங்கை அரசுகளின் நாடக மேடை ஆரம்பம்
[Monday, 30/01/2017 11:25 PM]
வாய்ப்பைத் தவறவிடப் போகிறார்களா சிங்களத் தலைவர்கள்?
[Thursday, 12/01/2017 06:59 AM]
பௌத்த மதவெறியினால் மியான்மாருக்குள் ஊடுருவும் ஐ.எஸ் தீவிரவாதம்
[Monday, 09/01/2017 06:48 AM]
தமிழ் பேசும் மக்களின் நம்பிக்கையை குழிதோண்டி புதைக்கக்கூடாது!
[Sunday, 08/01/2017 06:07 AM]
ஆட்சிக்கும் பிரதமருக்கும் அடித்துள்ள அபாய மணி..! - மோசமான விளைவுகளை சந்திக்குமா இலங்கை??
[Sunday, 08/01/2017 03:41 AM]
மீள வலியுறுத்தப்படும் கலப்பு நீதிமன்ற விசாரணை
[Sunday, 08/01/2017 03:40 AM]
நல்லாட்சி அரசின் பயணம் சரியான திசையில் செல்கின்றதா?
[Saturday, 07/01/2017 01:46 AM]
சர்வதேச நீதிபதிகளை பரிந்துரைத்த காரணம் இதுதான்!
[Saturday, 07/01/2017 01:44 AM]
சிறிலங்காவுக்கு சாதகமான மற்றொரு ஜெனிவா தீர்மானம்?
[Sunday, 01/01/2017 04:48 AM]
ஐ.நாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்
[Wednesday, 21/12/2016 07:22 AM]
கொல்லைப் புறத்தைச் சுற்றிவளைக்கும் சீனா – என்ன செய்யப் போகிறது இந்தியா?
[Monday, 19/12/2016 06:59 AM]
மரண விசாரணை பேரவையாக மாறுகின்றதா ஐ.நா?
[Sunday, 18/12/2016 06:30 AM]
கடற்படைத் தளபதியை கைவிடுவதா? இருதரப்பு நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கம்
[Sunday, 18/12/2016 06:29 AM]
கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பில் காலி கலந்துரையாடலின் முக்கியத்துவம்
[Thursday, 15/12/2016 06:54 AM]
இந்திய மாக்கடலில் இந்தியா – சீனா இடையே தீவிரமடையும் இழுபறிப் போர்
[Tuesday, 13/12/2016 06:43 AM]
பௌத்த இனவாதத்திற்கு பலி கொடுக்கப்படும் நீதித்துறை!
[Sunday, 11/12/2016 05:21 AM]
சிறிலங்காவும் சித்திரவதைகளும் – நியூயோர்க் ரைம்ஸ்
[Saturday, 10/12/2016 12:45 AM]
கருணா கைது! பின்னணி என்ன?
[Sunday, 04/12/2016 01:22 AM]
ட்ரம்ப் ஆட்சியில் அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கை – குழம்பும் ஆய்வாளர்கள்
[Sunday, 04/12/2016 12:55 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 15 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube