முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் தொடர்புகளுக்கு
2Tamil Home
ஐநா சபைக்குள் என்னை அரை மணி நேரம் பேச விடுங்கள்! தமிழீழம் அடைந்து விடுவேன் என்கிறார் சீமான்!
[Thursday, 13/09/2012 07:27 AM]
தமிழக அரசியலில் இனரீதியிலான தாக்குதல் கலாசாரத்தைத் தொடக்கி வைத்திருக்கிறார் சீமான். விளையாட்டுப் பயிற்சி, சுற்றுலா என்று தமிழகம் வந்த சிங்களர்கள் மீது அவருடைய 'நாம் தமிழர்" இயக்கத்தினர் முன்னின்று நடத்திய தாக்குதல்கள், இலங்கை அரசு தன்னுடைய பிரஜைகளை தமிழ்நாட்டுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தும் அளவுக்குச் சென்றது.

தேசிய ஊடகங்கள் தமிழ் அமைப்புகளை வெறி பிடித்தவையாகச் சித்திரிக்கின்றன. ஆனால், சீமானோ கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் பேசுகிறார்.

தமிழகம் வரும் சிங்களவர்கள் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?

முதலில் நாங்கள் தாக்குதல் நடத்துகிறோம் என்று சொல்வதே தவறு. என்ன தாக்குகிறோம்? ஒருவரைக் கையை ஒடித்திருக்கிறோமா, காயப்படுத்தி இருக்கிறோமா? இங்கே எவ்வளவு சிங்களவர்கள் படிக்கிறார்கள், என்னென்ன வேலைகளில் இருக்கிறார்கள் என்றெல்லாம் தெரியாதா?

நாங்கள் வன்முறைகளில் ஈடுபட வேண்டும் என்றெல்லாம் நினைத்திருந்தால், ஒரு சிங்களவன் இங்கே நுழைய முடியாது. ஆனால், பத்திரமாகத்தானே இருக்கிறார்கள்? அங்கிருந்து வந்தவர்களைத் திருப்பி அனுப்பியதற்காக இவ்வளவு கோபப்படும் நீங்கள், 584 தமிழக மீனவர்கள் செத்திருப்பதைப் பற்றி வருத்தப்படவில்லையே?

இப்போதுகூட நாகப்பட்டினம் மீனவர்களை சிங்களர்கள் அடித்துத் துரத்தி இருக்கிறார்கள். இதை எல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கச் சொல்கிறீர்களா?

எங்கள் இனம் மொத்தமும் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்டபோதும்கூட, அடக்க முடியாத ஆத்திரமும் கோபமும்கொண்டு வெறிகொண்ட மிருகங்களைப் போல உலவியபோதும்கூட, ஒரு சிங்களவன் மீதுகூட நகக்கீறலை ஏற்படுத்தாத ஜனநாயகப் பிள்ளைகள் நாங்கள்.

உள்ளுக்குள் எரிந்துகொண்டு இருந்த நெருப்பைக்கூட எங்கள் மீது கொட்டிக்கொண்டு வெந்து செத்தோமே தவிர, ஒரு சிங்களவனையும் தொடவில்லை.

ஆனால், எல்லாவற்றுக்குமே ஓர் எல்லை உண்டு. இப்போதும்கூட அடிக்கவில்லை, தாக்கவில்லை. ஆனால், செய்ய முடியும். இனியும் எங்கள் மீனவர்களைத் தொடாதே என்று எச்சரிக்கிறோம். இந்த நிலைமை தொடர்ந்தால், இப்படியே அற வழியில் நாங்கள் போராடிக்கொண்டு இருக்க மாட்டோம் என்று சொல்கிறோம்.

எப்போதாவது இங்கு வரும் சிங்களவர்களைத் தாக்குகிறீர்களே... அந்தக் கோபம் எப்போதுமே அங்கு இருக்கும் தமிழர்கள் மீது எதிரொலிக்காதா?

சரி, இவ்வளவு நாளும் தமிழர்களைக் கொன்று குவித்தார்களே... யார் இங்கே அடித்தார்கள் என்று அங்கு கொன்று குவித்தார்கள்? நாங்கள் ஒன்றுமே செய்யாமல் இருந்தால் மட்டும் எங்கள் மக்களுக்கு எல்லா உரிமைகளையும் கொடுத்து வாழவைத்து விடுவார்களா என்ன? நாம் உயிரை இழக்கலாம், உரிமையை இழக்கக் கூடாது!

சரி... நீங்கள் பிரதமராகவோ, தமிழ்நாட்டின் முதல்வராகவோ இருந்தால், இலங்கையுடனான உறவை எப்படி அணுகுவீர்கள்?

பிரதமராவது என் கனவல்ல. ஒரே கனவு... 12 கோடி மக்கள், இரண்டு பெரும் தாய்நிலங்களைக்கொண்ட ஓர் இனத்தைச் சேர்ந்த மக்கள், தங்களுக்கு என்று ஒரு நாடு அடைந்து, சுதந்திரமாக வாழ வேண்டும். இலங்கை இரு நாடுகளாக வேண்டும். அதுதான் கனவு.

அடிப்படையில் உங்கள் இயக்கத்தின் இலக்குதான் என்ன?'

இலக்கு ஒன்றுதான். இனத்தின் விடுதலை!

ஈழத் தமிழர்களுக்குத் தனி நாடு காணும் உங்கள் கனவு, இந்தியத் தமிழர்களுக்கும் நீளுமா?

இல்லை. ஆனால், இந்தியாவை ஆளும் தேசியக் கட்சிகள் இந்த நிலத்தில் இருந்து நாங்கள் பிரிந்துபோவதற்கான காரணங்களை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன என்று மட்டும் சொல்வேன். தவித்த வாய்க்குத் தண்ணீர் தராத ஒரு தேசத்தின் மீது எப்படி வரும் எனக்கு நேசம்?

தமிழீழத்தை அடைய என்ன திட்டம் உங்களிடம் இருக்கிறது?

அரசியல் புரட்சி. 12 கோடித் தமிழரில் ஒரு 50,000 பேரை ஒன்று திரட்டிவிட்டால்கூட மிகப் பெரிய புரட்சி. அட, ஐ.நா. சபைக்குள் என்னை அரை மணி நேரம் பேசவிடுங்கள். நான் நாடு அடைந்துவிடுவேன்!

பிரபாகரனுக்குப் பிந்தைய காலகட்டத்தில் உருவாகி இருக்கும் வெற்றிடத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் போட்டியின் வெளிப்பாடுதான் உங்களுடைய அரசியல் என்று சொன்னால், ஏற்பீர்களா?

இல்லை. ஒரு நீண்ட போராட்டத்தின் தொடர்ச்சி இது. ஆயுதம் ஏந்திய புரட்சி மௌனித்த பிறகு, அரசியல் புரட்சியாக அது வெடிக்கிறது. பல தளங்களில் வெடிக்கிறது. நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள்... ஒரு காலகட்டத்தில் மிகக் கூர்மையான, வலிமையான புரட்சியாக அது வெடிக்கும். இன்னும் 10 ஆண்டுகள் கழித்துப் பாருங்கள்... நிச்சயமாக தேசியக் கட்சிகளோ, திராவிடக் கட்சிகளோ இந்த நிலத்தில் இருக்கப்போவது இல்லை!

ஈழத் தமிழர் நலனுக்காக வைகோ, திருமாவளவன் போன்றோருடன் இணைந்து செயல்படுவதில் உங்களுக்கு என்ன தயக்கம்?

முடியாது. இந்திய தேசிய, திராவிட, சாதியக் கட்சிகளுக்கு மாற்றாகத்தான் நாங்கள் நிற்கிறோம். இனியும் தமிழ்ப் பிள்ளைகளான நாங்கள், இவர்கள் பின்னால் செல்ல முடியாது.

கருணாநிதியைப் பிடி பிடி என்று பிடிக்கும் நீங்கள், ஜெயலலிதாவை விமர்சிக்கத் தயங்குவது ஏன்? சிறை பயமா?

சிறை, வழக்குகளுக்கு எல்லாம் பயப்படுபவன் அல்ல நான். ஆனால், ஜெயலலிதாவை நான் ஏன் திட்ட வேண்டும்? அவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு ஜெயலலிதா யார்? கருணாநிதியின் பிழையே எம்.ஜி.ஆர்., கருணாநிதியின் பிழையே ஜெயலலிதா. என் இனமே அழியக் காரணம் யார்? காரணகர்த்தாவைத்தானே நான் திட்ட வேண்டும்?

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
மக்கள் முன்னால்:சீமான் காணொளி
[Wednesday, 22/05/2013 03:41 PM]
இலங்கையின் ஆதிகுடிகள் வேடர்கள், நாகர்கள் என்பதை கலபொட தேரர் ஏற்றுக்கொள்ள வேண்டும்! மனோ கணேசன்
[Wednesday, 22/05/2013 08:32 AM]
வடமாகாண சபையை திரிபுபடுத்த புதிய சட்ட மூலம் தயார்!- சுமந்திரன் தகவல்!
[Wednesday, 22/05/2013 08:30 AM]
ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்படுவதற்கு முன்பே மே 11.1991ல் மைசூரில் ராஜீவை கொல்ல முயற்சி- சித்தராமையா
[Wednesday, 22/05/2013 08:05 AM]
யாசின் மாலிக்கை அழைத்ததில் என்ன தவறு?- சீமான் அறிக்கை
[Tuesday, 21/05/2013 10:22 AM]
சிவசக்தி ஆனந்தன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை
[Tuesday, 21/05/2013 10:21 AM]
வடமாகாண ஆளுநரின் பாரிய நிதி மோசடி அம்பலம்!
[Tuesday, 21/05/2013 10:17 AM]
தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியா தோல்வி கண்டுள்ளது!- ஒப்புக் கொள்கிறார் இந்திய உயர்ஸ்தானிகர்
[Tuesday, 21/05/2013 10:16 AM]
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களை மீண்டும் விசாரணைக்கு அழைப்பு
[Monday, 20/05/2013 02:29 PM]
கனடாவின் நடவடிக்கைகள் குறித்து உன்னிப்பாக கண்காணிக்கப்படும்: இலங்கை
[Monday, 20/05/2013 04:42 AM]
காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு படையினரால் தொடரும் அச்சுறுத்தல்
[Monday, 20/05/2013 04:41 AM]
தமிழீழ மக்களின் சுதந்திர வேட்கையினை முரசறைந்த தமிழீழ சுதந்திர சாசனம்: ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பங்கெடுப்பு! சிங்கள தேசத்திற்கு பேரிடி
[Sunday, 19/05/2013 05:55 PM]
ஜெயலலிதாவுக்கு ஓட்டுக் கேட்டபோது பிரபாகரன் படம் பிடித்தது, இப்போது பிடிக்கவில்லையா? சீமான் கேள்வி!
[Sunday, 19/05/2013 10:56 AM]
ஈழப்போரின் இறுதி நாளும்- ஈழத்தமிழர்களின் இன்றைய நிலையும்...!
[Sunday, 19/05/2013 10:46 AM]
எஸ்.கஜேந்திரன் உள்ளிட்ட 15 பேர் நள்ளிரவில் விடுதலை
[Sunday, 19/05/2013 02:34 AM]
சுதந்திரத்தமிழீழம் கானல் நீரல்ல வரலாற்றில் பதியும் உண்மை: முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் வைகோ, கொளத்தூர் மணி, நெடுமாறன் உரை
[Saturday, 18/05/2013 03:16 AM]
மே 18 - தமிழர் இனவழிப்பு நினைவு நாள் - 2013 - தமிழீழ விடுதலைப் புலிகள்
[Saturday, 18/05/2013 03:05 AM]
13ம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம்! இலங்கையிடம் இந்தியா கோரிக்கை
[Friday, 17/05/2013 01:15 PM]
தேசியக்கொடி பட்டொளிவீச தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு மாநாடு உணர்வெழுச்சியுடன் தொடங்கியது!
[Friday, 17/05/2013 01:10 PM]
சிறிலங்கா வர ஐ.நா சிறப்புப் பிரதிநிதிக்கு அனுமதி மறுப்பு?
[Friday, 17/05/2013 07:49 AM]
பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமைப்பின் நிகழ்வுக்கு இலங்கைக்கு அழைப்பில்லை
[Friday, 17/05/2013 07:33 AM]
பா.உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனை 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு
[Thursday, 16/05/2013 02:39 PM]
ஐ.நா.வின் விசேட பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்புவதாக அறிவித்துள்ளார்!
[Thursday, 16/05/2013 02:38 PM]
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு... ஈழம் இன்று! - டி.அருள் எழிலன்
[Thursday, 16/05/2013 08:16 AM]
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தினர் மறைந்திருந்த வீடு கண்டுபிடிப்பு
[Thursday, 16/05/2013 08:08 AM]
பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வது என்ற பிரிட்டனின் முடிவு சர்ச்சைக்குரியது!- பிரிட்டிஷ் துணைப் பிரதமர்
[Wednesday, 15/05/2013 03:24 PM]
விடுதலைக்கான இன்றைய கனவும்..நாளைய வெற்றியும்....! தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு எழுச்சி மாநாடு அமெரிக்காவில் அங்குராப்பணம்!
[Wednesday, 15/05/2013 03:20 PM]
சீனக் கடற்படை நடமாட்டங்கள் அதிகரிப்பு - இந்திய கடற்படை மாநாட்டில் ஆராய்வு
[Wednesday, 15/05/2013 06:35 AM]
இந்திய சிறிலங்கா உறவில் மாற்றத்தை ஏற்படுத்த இந்திய மாநிலமான தமிழ்நாட்டால் முடியுமா?
[Wednesday, 15/05/2013 06:33 AM]
உயிரினும் மேலான ஈழ உறவுகளே மீண்டும் ஒரு முறை முழங்குக! -வைகோ அழைப்பு
[Tuesday, 14/05/2013 04:27 PM]
தஞ்சாவூரில் அதிநவீன சுகோய் போர் விமானங்களை நிறுத்துகிறது இந்தியா
[Tuesday, 14/05/2013 08:07 AM]
"தமிழ் தேசமிருந்தால் தமிழ்த் தேசிய அவையில் பங்குபற்றுவோம்"
[Tuesday, 14/05/2013 04:50 AM]
மே18 : பிரித்தானிய பிரதமர் அலுவலகத்துக்கு சொல்லவிருக்கும் செய்தி என்ன? லண்டனில் மாபெரும் பேரணி!
[Monday, 13/05/2013 04:02 PM]
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கை அரசாங்கத்தினால் நிராகரிப்பு
[Monday, 13/05/2013 07:57 AM]
யாழில் பாடசாலை மாணவிகளை வைத்து விபச்சார நடவடிக்கை! விடுதி முற்றுகை இருவர் கைது
[Monday, 13/05/2013 07:46 AM]
மகாசேனன் புயல் அச்சுறுத்தல் - வடக்கு, கிழக்கில் தாழமுக்கம்!
[Monday, 13/05/2013 07:32 AM]
கனடாவில் தெரு ஒன்றுக்கு சூட்டப்பட்ட தமிழ்ப் பெயர் `வன்னி`
[Sunday, 12/05/2013 10:30 PM]
அசாத் சாலி பற்றிய இரகசியங்களை சிறிலங்காவுக்கு கொடுத்த இந்திய புலனாய்வு அமைப்புகள்
[Sunday, 12/05/2013 04:26 AM]
குற்றத்தை ஒப்புக்கொண்டார் பிரபாகரனின் பாடசாலைத் தோழர்
[Sunday, 12/05/2013 04:24 AM]
பௌத்த மயமாக்கப்படும் கிளிநொச்சி - வரலாறு காணாத வெசாக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு
[Sunday, 12/05/2013 04:15 AM]
கஜேந்திரகுமார் கேள்விகளால் திணறிய சம்பந்தன்; மன்னாரில் நடந்தது என்ன?!
[Saturday, 11/05/2013 03:55 PM]
அசாத் சாலி விடுதலையானது எப்படி?
[Saturday, 11/05/2013 02:32 AM]
இலங்கையில் தொடரும் வன்முறைகள்! ஆவணக் காணொளி! பிபிசி நிருபர் சார்லஸ் ஹவிலண்ட்
[Saturday, 11/05/2013 02:09 AM]
இரத்தம் தோய்ந்த இலங்கையின் செங்கம்பளத்தில் பிரென்சு அழகுராணி போட்டியின் அணிவகுப்பு!
[Friday, 10/05/2013 09:27 AM]
அசாத் சாலி விடுதலை செய்யப்பட்டார்!
[Friday, 10/05/2013 09:13 AM]
வடமாகாண ஆளுநர் சந்திரசிறிக்கு எதிராக அடிப்படை மனிதஉரிமை மீறல் மனு உச்ச நீதிமன்றில் தாக்கல்
[Friday, 10/05/2013 12:40 AM]
லண்டனில் பிரமாண்டமாக முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சிப் பேரணிக்கான ஏற்பாடு! அலையெனத் திரளுமாறு தமிழ் மக்களுக்கு அழைப்பு!
[Friday, 10/05/2013 12:37 AM]
யாழ்ப்பாணம் சிறிலங்காவின் முதல் இராணுவ நகரமாக மாற்றப்படுகின்றதா?
[Thursday, 09/05/2013 03:49 AM]
மத்தலவுக்கான விமான சேவையை ஆறே வாரங்களில் நிறுத்தியது எயர் அரேபியா
[Thursday, 09/05/2013 03:47 AM]
வடக்கு தேர்தல் பிரசாரம் வந்த வேகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவோடு மோதுகிறார் கே.பி
[Wednesday, 08/05/2013 02:18 PM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம் 1 of 36 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
வலம்புரி
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒருபேப்பர்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
6அறிவு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
உயர்வு
பாரிஸ் தமிழ்
அத தெரண
சரிதம்
ஈழ நேசன்
ஈழ தேசம்
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
தாளம் நியூஸ்
சங்கதி..1
சங்கதி..2
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
இன்போ தமிழ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
தமிழ்த்தாய்
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
வணக்கம் இந்தியா
சென்னை ஒன்லைன்
புதியஉலகம்
செய்தி
தென்சேய்தி
தமிழ் 10
ஈழநாதம்
அலைநாதம்
பெரியார் குரல்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
யாழ்மண்
நாதம்
மாவீரர் இல்லம்
சிறிலங்கா மிறர்
பூராயம்
தாய்த் தமிழ்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் போய்ஸ்
பதிவு-2
ஈழம் 5
ஈழம் டெய்லி
வெற்றி முரசு
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
தெனாலி
தமிழன்எக்ஸ்பிரஸ்
அமுதசுரபி
தமிழ்வாணன்
சவுக்கு
தமிழ்மணம்
திரைமணம்
விறுவிறுப்பு
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
அதிகாலை
தங்கம்
கீற்று
இருக்கிறம்
ஊர்களின் தளங்கள்
மாதகல்
இணுவில்
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
அல்லையூர்
நீர்வேலி
குரும்பசிட்டி வெப்
தாவடி
கோண்டாவில் மக்கள்...
ஊரெழு மக்கள்...
வல்வெட்டி
குப்பிழான் வெப்
அளவெட்டி
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
சினிமா சௌத்
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
விழுது
உழவன்
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
யாழ் இந்து மகளிர்
சென்.ஜோண்ஸ் கல்லூரி
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
சென் பற்றிக்ஸ் கல்லூரி
யாழ். வேம்படி
ஸ்கந்தவரோதயக் கல்லூரி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
அனைத்துலக தமிழ் வானொலி-GTR
கனடா CTBC
புலிகளின் குரல்
ATBC -அவுஸ்திரேலியா
மொன்றியல்-MTR-24
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
விடியல் FM (sri lanka)
தமிழ் அருவி FM
ஜே-FM
தமிழ் ஸ்டார் வானொலி
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
இதயம் FM
வெற்றி வானொலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
அருள் ஜோதிடம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Old Tamil Songs
Good Lanka
தமிழ் mp3 உலகம்
இசைத்தென்றல்
Isaimazhai
தமிழ் MP3
தமிழ் பாடல்கள்
தமிழ்மாலை
ஹம்மா MP3
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasrinews
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Lankapuvath
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelanatham
Eelam-E-news
Tamil Guardian
tamilspeednews
திருமண தளங்கள்
கும்பம்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
பரபரப்பு
திரை வீடியோ
தமிழ்ஜோதி
Movie Lanka
திருட்டுVCD
ரீச் சதீஸ்
யூசர் ரியூப்
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
தமிழ்விக்ஸ்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழருவி
தமிழ் பீக்
தமிழ் கீ
ரண் தமிழ்
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2013). Facebook Twitter Youtube